ஆறு மணிக்கு மேல அண்ணன் ரொம்ப பிஸி : சரக்கு கிளாஸுடன் வலம் வரும் சல்மான் கான்.!! 

சர்ச்சையில் சிக்குவது சல்மானுக்கு புதியது இல்லை என்றாலும் தற்போது அவருக்கு புதிய வரவாக வந்துள்ளது சரக்கு கிளாஸ் வீடியோ.  மும்பையில் பிரபல தயாரிப்பாளர் முராத் கெடானி பிறந்தநாள் விழாவிற்கு சென்ற  சல்மான் கான் கையில் கிளாஸ் வைத்து இருப்பதும் காரை விட்டு இறக்கியது அதை மறைக்க முடியாமல் தனது ஜீன்ஸ் பேண்டில் மறைக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

சர்சையில் சாகசம் செய்யும்  சல்மான் கானுக்கு  இது புதியது இல்லையென்றாலும் ரசிகர்கள் பலர் இதை வசைபாடி வருகின்றனர்.  கடந்த சனிக்கிழமை பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற சல்மான் கான் கையில் கிளாஸுடன் காரை விட்டு இறங்கினார். கையில் கிளாஸ்  இருப்பதை உணர்ந்ததும் அதை மறைக்க இடது பாக்கெட்டில் மறைக்க முயற்சி செய்கிறார், அது முடியாத பட்சத்தில் வலது பக்க பாக்கெட்டில் வைத்து பார்ட்டி அறைக்குள் செல்கிறார். 

இந்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆன நிலையில் அதை அவருடைய ரசிகர்கள் இது சல்மான் ஸ்டைல் என தெரிவித்தாலும் மற்ற ரசிகர்கள் அதை கேலி செய்து வருகின்றனர். பார்ட்டிக்கு செல்லும் போது கிளாஸ் உடன் செல்பவர் கல்யாணத்திற்கு செல்லும்போது கையில் இலையுடன் செல்வார  என கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *