வளையலோடு வளையலாக போதைப் பொருட்களை வளைத்து பிடித்த போலீசார்

வளையல் பெட்டிக்குள் மறைத்து வைத்து இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்துள்ளனர்…

சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு கிடைத்த ரகசிய தகவலின் தனிப்படை போலீசாரும், துறைமுக காவல் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரும் சென்னை மண்ணடி பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தல் திட்டமிட்டிருந்த 4 பேரை கைது செய்து விசாரணை செய்ததில்

திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பதுக்கி வைத்துருந்த சுமார் 2 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 2.5 கிலோ ஆம்பிடமைன் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் விடுதி ஊழியர் ஒருவரை கைது செய்தனர்

பின்னர் கைதான 5 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த போதைப் பொருட்களை இலங்கை மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக வளையல் பெட்டிகளுக்குள் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி செல்ல இந்த கும்பல் திட்டமிட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போதைப் பொருட்களை கடத்த முயன்ற திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஜாகீர் ஹுசைன், முகமது சுல்தான், நாசர், ஜுனைத் மற்றும் அசாருதீன் ஆகிய 5 பேரிடமும் தனித்தனியாக வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். . தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *