ச்சே அந்த மனசு தான் சார்… திருடனின் கருணை

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளஞ்சியம் என்பவரது மகள் குஜராத்தில் இருந்து அண்மையில், திருச்சி வந்துள்ளார். தன் தோழியை பார்ப்பதற்காக அவர் சென்று கொண்டிருக்கையில் அவரது கைப்பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
அந்தப் பையில் 15000 ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு மற்றும் இரண்டு செல்போன்கள் ஆகியவை இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ஆனாலும், தன் செல்போன் எண்ணிற்குத் தொடர்ப்பு கொண்டுள்ளார். அப்போது அழைப்பை எடுத்து கைப்பையைத் திருடிய நபர் பேசியுள்ளார். அப்போது, தனது ஏடிஎம் கார்டையும் சென்போனையும் மட்டுமாவது திருப்பித் தருமாறு அழுது புலம்பியுள்ளார்.
இதனைக் கேட்டு இரக்கமடைந்த திருடன் ஏடிஎம் கார்டையும் செல்போனையும் மட்டும் திருப்பித் தர ஒப்புக் கொண்டுள்ளான். அதன்படி, ஒரு கடைக்கு அருகில் அவர்களை வரச் செய்து தூரத்தில் இருந்தே கைப்பையை தூக்கியெறிந்து விட்டு சென்றுள்ளான். திருடனின் இந்த இரக்கமான செயல் அப்பகுதி மக்களிடம் பேசுபொருளாகி உள்ளது.