காவல் துறையால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல இடங்களில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை திருமுல்லைவாயில் அருகே அயப்பாக்கத்தில் பாக்கியராஜன் என்ற இளைஞர் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து சென்ற காவல் துறையினர் அவரை அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

ஆனால், காவல் துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவர் தான் வைத்திருந்த பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்துள்ளார். இதனால், அவருக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது..

கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞரை காவல் துறையினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனாலும், ரத்தப் போக்கு காரணமாக பாக்கியராஜன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

காவல் துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…