ஒரு பெரியப்பா பண்ற வேலையா இது!

சென்னை ஓட்டேரி அருகே எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த சிறுமியின்
பெரியப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியப்பா டில்லிபாபு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டில்லிபாபுவை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து டில்லிபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.