மதன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

சமூக வலைதளமான யூ டியுப்பில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி எனப்படும் கேமை மதன் என்பவர் விளையாடி வந்தார்.
அப்படி விளையாடும் போது, பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் சிறுவர்களை கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து, தேடப்பட்டு வந்த அவர் தலைமறைவானார். இதனால். அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தருமபுரியில் தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மதனை சிறப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவரும் சிறையில் அடைக்கபட்டார். இவர்களுக்கு ஜாமீன் கேட்டு மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், 8 மாதக் குழந்தையுடன் சிறையில் இருப்பதால் அவரின் மனைவி கிருத்திகாவுக்கு மட்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து உச்ச நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் மதனுக்கு ஜாமீன் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆபாச யூ டியூப்பர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதால் மதனுக்கு ஓராண்டுக்கு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.