வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்… மருத்துவரின் வாக்குமூலம் உண்மையா?

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகாரளித்திருந்தார். மேலும், தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். விசாரணை முடிந்த நிலையில் அவர் தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மணிகண்டன் தென் மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நடிகைய அழைத்துச் சென்றது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அடையாறு மகளிர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வற்புறுத்தலின் பேரிலேயே நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக, கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.