சாத்தான் குளம் இரட்டைகொலைக்கு நியாயம் கிடைக்கும்… கனிமொழி உறுதி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காகக் காவல்துறையினர் அழைத்துச் செய்யப்பட்டு தாக்கியதில் அவர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழி நேரில் சென்று இவர்கள் இருவருக்கும் மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவாகி உள்ளது. தொடர்ந்து காவல்நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்டவர்களை நாம் இழக்கிறோம்.
அதிகாரம் ஏவிவிட்டுக் காவல் நிலையங்களில் மரணமடையக்கூடிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல்கள் எழுப்பப்படுகிறது. இந்த வழக்கைக் கேரளாவிற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்குத் தமிழக அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் பேசியுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் நியாயம் கிடைக்கும்”