பப்ஜி மதன் மீது குவியும் புகார்கள்!

சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு பப்ஜி மதன் மீது இ-மெயில் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்து வருவதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள், இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என சென்னை சைபர்கிரைம் காவல் துறையினர் மெயில் முகவரி அறிவித்திருந்தனர். ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ பதிவு செய்வதாக கூறி 159 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
புகார் அளித்த அனைவருக்கும் மெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.