கட்சிப் பணத்தை பதுக்கி வீடு கட்டும் ஹெச். ராஜா…பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஹெச். ராஜா, காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். பாஜகவின் காரைக்குடி பெருநகர தலைவராக இருக்கும் சந்திரன், காரைக்குடி தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால், காரைக்குடி தொகுதியில் ஹெச். ராஜா தோல்வியடைந்துள்ளார். இதனால், ஹெச். ராஜா தரப்பு சந்திரன் மேல் கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹெச் ராஜா சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் என் உழைப்பின் மேல் சந்தேகப்படுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அவரின் மருமகன் என்னை மிரட்டுகிறார். ஹெச் ராஜாவால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன்.

தேர்தல் செலவுக்காக கட்சி கொடுத்த தொகையை ஹெச் ராஜா செலவு செய்யாமல் பதுக்கிவிட்டார். இப்போது அவர் 4 கோடி ரூபாயில் வீடு கட்டி வருகிறார்” எனத் தெரிவித்து குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *