மூட நம்பிக்கையால் பறி போன உயிர்… சிறுவனை அடித்தே கொன்ற கொடூரம்

உடல் நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவர்களைச் சென்று பார்ப்பது தான் முறை. ஆனால், மூட நம்பிக்கையில் நம்பிக்கை உள்ளவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது, பேய் பிடித்து விட்டதாக நினைத்து பேய் ஓட்டுபவர்களிடம் சென்று ஏமாறுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. சிறுவனுக்கு, பேய் பிடித்து விட்டதாக நினைத்த பெற்றோர் பேய் ஓட்டுவதற்காக  கேவி குப்பத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி, திலகவதி, கவிதா ஆகியோரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மூன்று பெண்களும் சிறுவனுக்கு பேய் ஓட்டுவதாகக் கூறி மாறி மாறி அழைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். தன்னை விட்டு விடுமாறு சிறுவன் கதறியும் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக அடித்ததன் விளைவாக சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். அதன்பின், சிறுவனை எழுப்ப முயன்ற போது தான் உயிரிழந்துள்ளது தெரிந்துள்ளது.

இதனால், பேய் ஓட்டுவதாக கூறி இரவு முழுவதும் சிறுவனை அடித்தே கொலை செய்ததாக மூன்று பெண்கள் மீதும் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டது. இவர்களுடன் சேர்த்து சிறுவனின் தாயையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *