ஆபாச பேச்சு அச்சச்சோ போச்சு…மதனின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சமூக வலைதளமான யூ டியுப்பில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி எனப்படும் கேமை மதன் என்பவர் விளையாடி வந்துள்ளார்.
அப்படி விளையாடும் போது, பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் சிறுவர்களை கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து, தேடப்பட்டு வந்த அவர் தலைமறைவானார். இதனால். அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், தருமபுரியில் தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மதனை இன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் வழி அவர் 4 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததும், 4 சொகுசு கார்கள் வரை வாங்கியதும் தெரிய வந்துள்ளது.
அதில், முதற்கட்டமாக அவரது இரண்டு சொகுசு கார்களை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் மதன் மற்றும் அவரின் மனைவி கிருத்திகா ஆகியோரின் வங்கிக் கணக்கையும் முடக்கியுள்ளனர்.