தாயை இழந்து தாயகம் திரும்பிய 10 மாத குழந்தை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரியைச் சேர்ந்த வேலன் (38) மற்றும் பாரதி(36) ஆகியோருக்கு 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் முதல் குழந்தை சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இறந்து விட்டது. மேலும், வேலனுக்கும் சரியான வேலை கிடைக்காததால் பாரதி வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்டுள்ளார்.

அதன்படி, தனது மூன்றாவது கைக்குழந்தையுடன் துபாய்க்கு வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இரண்டு ஆண்டுகள் அங்கு பாரதி பணி புரிந்து வந்த நிலையில், கொரோனா காரணமாக தாய்நாடு திரும்பினார்.

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது 7 வயது குழந்தையுடன் துபாய் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

20 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மே மாதம் 29 ஆம் தேதி இறந்துள்ளார். மனைவியின் உடலை இந்தியா கொண்டு வர பணம் இல்லாததால் அங்கேயே வைத்து இறுதிச்சடங்கு நடந்துள்ளது.

இந்நிலையில், தனது 10 மாதக் குழந்தையை இந்தியா கொண்டு வர வேலன் முயன்றுள்ளார். இதையறிந்த துபாய் நகர தி.மு.க. அமைப்பாளர் மீராமிதுன் அங்குள்ள இந்திய துாதரகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் தமிழக முதல்வரின் கவனத்திற்கும் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கைக்குழந்தை தேவேஷை பயணி ஒருவர் மூலம் நேற்று மாலை துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தாயின் அஸ்தியுடன் திருச்சி விமான நிலையத்தில் தனது தந்தையையும், அண்ணனையும் பார்த்த குழந்தை கொஞ்சி விளையாடியது பார்ப்போரின் நெஞ்சினை உருக்குவதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…