கிஷோர் கே சாமி மீது குவியும் புகார்கள்…நடிகை ரோகினியும் புகார்

பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி அரசியல் ரீதியான தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.

அதில், தமிழக அரசியல் தலைவர்களையும் பெண் பத்திரிக்கையாளர்களையும் அவதூறாக பேசியதாக புகாரளிக்கப்பட்டது. இதனால், அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், நடிகை ரோகினி தன்னையும் தனது கணவரையும் தவறாகப் பேசியதாக ஆன்லைன் மூலமாக புகாரளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “கடந்த 2014 ஆம் ஆண்டு கிஷோர்.கே.சாமி தனது வலைதள பக்கத்தில் தன்னைப் பற்றியும், மறைந்த நடிகரும் தனது கணவருமான ரகுவரன் பற்றியும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த தவறான கருத்துகளால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.

இதே போல் பாஜக மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதனால் கிஷோர் கே சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசும் கிஷோர் கே சாமி மீது புகாரளித்துள்ளதால் கிஷோர் கே சாமி மீதான வழக்குகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *