பெண்களை ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் எங்கே…? மனைவியிடம் விசாரணை!

பெண்களை ஆபாசமாக பேசிய யூ டியூபர் பப்ஜி மதனை தீவிரமாக தேடி வரும் சைபர் கிரைம் காவல்துறையினர், அவரது மனைவி மற்றும் தந்தையை சென்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட “பப்ஜி” ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையசேவை மூலம் பயன்படுத்தியது, விளையாட்டின்போது பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசியது என்பன உள்ளிட்ட புகார்கள் எழுந்ததை அடுத்து பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் மதனை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், அவர் மீது இதுவரை 159 புகார்கள் வந்துள்ளன. எனவே மதன் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் காவல்துறையினர், சேலத்தில் இருந்து மதனின் மனைவியையும், தந்தையையும் சென்னை அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.