தொடரும் கைது நடவடிக்கை…பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி கைது

பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சுவாமி, யூடிடியூப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பேஸ்புக் பக்கங்களில் தனது அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

ஆனால், அவரின் சில கருத்துகள் அரசியல் சார்ந்ததாக அல்லாமல் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் விமர்சிப்பதாகவும், அவர்கள் குறித்த தவறான தகவல்களைத் தெரிவிப்பதாகவும் இருந்தது.

மேலும், பெண் பத்திரிக்கையாளர்களையும் இழிவு செய்யும் படி பேசியதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடரந்து, அவதூறு பரப்பியதற்காகவும், பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதற்காகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.மேலும், சங்கர் நகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *