கட்சியில் இருந்து நிக்கியிருந்தாலும் துரைமுருகனை விடுதலை செய்ய சீமான் கோரிக்கை

திருச்சி கே.கே. நகரில் வாகன உதிரிபாகங்கள் கடை நடத்தி வரும் வினோத் என்பவர் அண்மையில் விடுதலை இயக்கத்தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூறாகப் பேசி விமர்சித்திருந்தார்.

இதற்காக சாட்டை துரை முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் என நான்கு பேர் அவரின் கடைக்கு நேரில் சென்று அவரிடம் எடுத்துக் கூறி மிரட்டி பிரபாகனை இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கூறி வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வினோத் தான் மிரட்டப்பட்டது குறித்து காவல் துறையிடம் புகாரளித்தார். இதனால், சாட்டை துரைமுருகன் வினோத், சரவணன், சந்தோஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இந்த நான்கு பேர் கைதுக்கும் கண்டனம் தெரிவித்து விடுதலை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவர், “தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து,அவருக்கு புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன்,வினோத்,சந்தோஷ்,சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றமாக கருதி தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல்.சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலைசெய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்களில் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிகத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Drupathi

“உலகமே இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது” – குடியரசுத் தலைவர் உரை!

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில்…

துரோகம் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது எடப்பாடி அணியை வச்சு செய்த பி.வி.கே.பிரபு

துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் துரோகம் என்பது அவர்களது மரபணுவிலே…

போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் அராஜகம்…!

சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது!சிவகாசி…

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை… தேவையும் இல்லை… சுப. வீரபாண்டியன் நறுக்

தமிழ்நாட்டில் மக்களை மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் திருவள்ளுவர் சிலை…