ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த மவுலி(48) என்பவர் மனைவி சுமிதா(41)வுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, மே 21 ஆம் தேதி அவரை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மவுலி அனுமதித்திருந்தார். சுமிதா மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், 22 ஆம் தேதி சுமிதாவைக் காணச் சென்ற மவுலி அவர் அங்கு இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பத்துநாட்களாகியும் மனைவியைக் காணாததால், மே 31 ஆம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் மவுலி புகார் அளித்தார்.
ஆனால், சுமிதா மருத்துவமனையின் எட்டாவது மாடியில் அழுகிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மூன்றாவது மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமிதா எப்படி எட்டாவது மாடிக்குச் சென்றார். அங்கு எவ்வாறு மரணமடைந்தார்.
மரணமடைந்திருந்தாலும் எப்படி இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கான எந்தப் விளக்கத்தையும் மருத்துவமனை நிர்வாக தெரிவிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, சுமிதாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா நோயின் தாக்கத்தால் தான் சுகிதா இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.