முன் ஜாமீன் கேட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, நடிகை சாந்தினி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும், நெருக்கமாக இருந்ததால், மூன்று முறை கருவுற்றதாகவும் மூன்று முறையும் தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார்.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தன் மீது உள்ள குற்றங்களை மறுத்து வந்த மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”நடிகை பணம் பறிக்கும் நோக்கத்தில் என் மீது பொய் புகார் கூறி வருகிறார்.
மலேசியாவில் இது போன்ற மோசடிகள் இதற்கு முன் ஈடுபட்டுள்ளார். மருத்துவ உதவிக்காக நான் கொடுத்த 5 லட்சம் பணத்தைத் திரும்ப கேட்டால் இப்படி வீண் பழி போட்டு மிரட்டுகிறார்” என கூறியுள்ளார்.