பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் கைது!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பாலியல் தொல்லைகள் தொடர்பான வழக்குப் பதிவுகள் அதிகமாகி வருகின்றன.
இதில் வேதனை அளிக்கும் உண்மை என்னவென்றால் சிறு குழந்தை முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என அனைவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
அது போன்ற ஒரு சம்பவம் தான் சிவகங்கையில் தற்போது அரங்கேறியுள்ளது.
சிவகங்கையில் அடுக்குமாடி குடியிருப்பில் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகள் வசித்து வந்துள்ளனர். அதே அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்த்தளத்தில் அக்ரம் என்னும் இளைஞர் வசித்து வருகிறார்.
அக்ரமை பார்க்க அவரது நண்பர்கள் சிலர் வழக்கமாக அவரது வீட்டிற்கு வருவதுண்டு. அப்போது அக்ரம் மற்றும் அவரது நண்பர்களும் மேல் குடியிருப்பில் உள்ள 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
ஒரு நாள் குழந்தையை காணவில்லை என தாய் மாடிக்குச் சென்று பார்க்கையில் அக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் இந்த சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அக்ரம் மற்றும் அவர் நண்பர்கள் மீது அவர் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அக்ரம் மற்றும் அவரது 5 நண்பர்களையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.