ஓயாத சர்ச்சை! ராஜகோபாலன் மீது குவியும் புகார்கள்

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜபோபாலன் என்பவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகாரளித்தனர். இந்த விவகாரம் விஷ்வரூபமெடுத்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, காவல் துறையினர் நடத்தி விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் மீது தொலைபேசி வாயிலாகவும், வாட்ச் அப் வாயிலாகவும் பலர் புகாரளித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
புகாரளித்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரனை நடத்தி புகார்கள் உறுதியாகும் பட்சத்தில், ராஜகோபாலன் மீது தனித்தனி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்ப்டும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.