குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆசிரியர்!
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் ராஜகோபாலன், மாணவர்களுக்கு ஆபாசப் படங்களின் இணையப் பக்கங்களை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, பின்னிரவில் மாணவிகளுக்கு போன் செய்வது, தேவையில்லாமல் தொடுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
ராஜகோபாலனின் வீட்டில் இருந்து அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை ஆய்வு செய்த போது வாட்ஸ் அப் மெசேஜ்களை அவர் தனது செல்போனில் இருந்து நீக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
காவல் துறையினரின் விசாரனையில் கடந்து ஐந்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பள்ளியில் இருந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.