மேலும் சில ஆசிரியர்களையும் போட்டுக் கொடுத்த ராஜகோபாலன்

சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

ஆசிரியர் ராஜகோபாலன், மாணவர்களுக்கு ஆபாசப் படங்களின் இணையப் பக்கங்களை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, மாணவிகளைத் திரைப்படங்களுக்கு அழைப்பது, பின்னிரவில் மாணவிகளுக்கு போன் செய்வது, தேவையில்லாமல் தொடுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

ராஜகோபாலனின் வீட்டில் இருந்து அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதனை ஆய்வு செய்த போது வாட்ஸ் அப் மெசேஜ்களை அவர் தனது செல்போனில் இருந்து நீக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன்னைப்போல மேலும், சில ஆசிரியர்களும் மாணவர்களுக்க்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக ராஜகோபாலன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மேலும் சில ஆசிரியர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்ப்டும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…