பேய் விரட்டுவதாக கூறி பெண்ணை அடித்து துன்புறுத்தும் சாமியார்!
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் கருப்பனார் சுவாமி கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாளம்பாடி சேடப்பட்டி புதூரை சேர்ந்த 50 வயதான அனில்குமார் என்பவர் இந்த கோயிலை புதுப்பித்து தனியாக மடம் போல் மாற்றி பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் அமாவாசை, பெளர்ணமி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறி சொல்வது, பில்லி, சூனியம் எடுப்பது, பேய் விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அப்பகுதி மக்களிடையே தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டார்.
இந்த சூழலில் தன்னுடைய விளம்பரத்தை பெரிதுபடுத்த நினைத்த அனில்குமார் புதுசத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து தான் பெண்களுக்கு பேய் விரட்டுவதை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியூபில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரும் சாமியார் சொன்னடி வீடியோவை பதிவு செய்ததையடுத்து குறிப்பிட்ட வீடியோ காட்டுத் தீ போல் அப்பகுதியில் வேகமாக பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அந்த சாமியார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ராசிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.