உயிரைப் பறித்த புதையல் ஆசை!தூத்துக்குடியில் சோகம்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே திருவள்ளூர் காலணியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கடந்த 6 மாதமாக 50 அடியில் குழி தோண்டி வருகிறார்.

சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக அந்த குழியில் திடீரென தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு மீண்டும் குழி தோண்டும் பணியை முத்தையா தொடங்கியுள்ளார்.

அப்போது, குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் முத்தையாவின் இரு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேரும் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையில் நால்வரையும் அனுமதித்த நிலையில் ரகுபதி, நிர்மல் கணபதி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து முத்தையா மகன்கள் இருவருக்கும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கேரளா மாந்திரீகர் ஒருவர் வீட்டில் புதையல் உள்ளது. தோண்டினால் கிடைக்கும் என கூறியதைக் கேட்டு வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *