பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

தேனி மாவட்டத்தில் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (42). ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2009ம் ஆண்டு தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்பு அப்பெண்னை திருமணம் செய்து கொண்டு அவரை ஏமாற்றி விட்டுச் சென்றுவிட்டாராம். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அப்போதைய மத்தியபாகம் காவல் ஆய்வாளர் வீமராஜ் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு கடந்த 20.09.2010 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 2,000/- அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…