ப்ரியங்கா காந்தி சரமாரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் பொது செயலாளர் ப்ரியங்கா காந்தி உத்திர பிரதேச மாநிலத்தை குற்றங்கள் மலிந்து காணப்படும் மாநிலம் என விமர்சித்துள்ளார்.

ஹாத்ராஸில் தன் மகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கேட்டதால் அந்தப் பெண்ணின் தந்தை கொல்லப்பட்டார். ஒரு பெண்ணை காணவில்லை என்று தேடி வந்த நிலையில் அந்த பெண்ணின் உடலானது புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.ஒவ்வொரு நாளும் உத்திர பிரதேசத்தில் ஏதாவது ஒரு குடும்பம் தங்களுக்கு எதிரான அநீதிக்கு நியாயம் கேட்டு வருகின்றது.ஆனால், இதை எதையுமே கண்டுகொள்ளாமல் பா.ஜ.க பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றது.உத்திர பிரதேச காவல்துறை தொடர்ந்து இது போன்ற வழக்குகளை பதிவு செய்து வருகிறது.கடந்த பிப்ரவரி 28 தனது 13 வயது மகளை காணவில்லை என்றும் ஹரேந்திரா என்பவர் கடத்திவிட்டதாகும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *