உத்திரபிரதேசத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
உத்திரபிரதேச காவல்துறை கௌதம புத்தா நகரில் இளைஞரை கத்தியால் குத்திய நபரை கைது செய்துள்ளனர்.
விபின் என்பவர் தீபக் என்ற இளைஞரை கத்தியால் குத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணையின் போது, தீபக் தன் தங்கையுடன் பேசுவதை பிடிக்காத விபின் இப்படி செய்துள்ளார் என தெரிய வந்தது.இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட தீபக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.