கொலையில் முடிந்த கைகலப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியில் தேவபிரசாத் வசித்து வருகிறார். 26 வயதாகும் இவர்,  மறைமலைநகர் பகுதியில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை லீவு என்பதால், சாயங்காலம் மது அருந்துவதற்காக தனது நண்பர்களான சதீஷ், வினோத் ஆகியோருடன் தேவபிரசாத் சென்றுள்ளார்.அப்போது அங்கு விஜி என்பவர் வந்துள்ளார். அவருக்கும், தேவபிரசாத்திற்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கை கலப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இறுதியில், தேவபிரசாத்தை பெரிய  கற்களால் அடித்தும் அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள், அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் தேவபிரசாத்தின் உயிர் பிரிந்து விட்டது. கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.


இதையடுத்து, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் சொல்லவும், மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து காவல் துறையினர்  சம்பவ நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான், மாட்டுக் கறி கடை நடத்தி வரும் விஜிக்கும் தேவபிரசாத்துக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், கொலைக்கு முன்விரோதம் மட்டும் தான் காரணமா? இல்லை சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கொலையா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *