பிரதமர், கவர்னர் பெயரை பயன்படுத்தி 100கோடி ரூபாய் சுருட்டிய கும்பல்
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மாதவய்யா, அங்கிட் மற்றும் ஓம் என்ற மூன்று பேர், சென்னை தியாகராய நகரில் வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பிரதமர் மற்றும் கவர்னர் பெயரைச் சொல்லி இவர்கள் செய்த மோசடிகள் அம்பலமாகியுள்ளன.
தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா,கேரளா,கர்நாடக மாநிலங்களிலும் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பாரதிய ஐனதா கட்சியில் ராஜ்ய சபா எம்.பி சீட் வாங்கித் தருவதாகவும், பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர்.
மேலும், இதற்காக கவர்னர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தின் இமெயில் முகவரிகளை தவறாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மைசூரில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் சி.பி.சி.ஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.