பாடங்கள் புரியாததால் பயந்து மாணவர் தற்கொலை

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரவீன் என்ற 16 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கொரனா காலத்தில் பொது முடக்கத்தால், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

ஆன்லைன் வகுப்புகள் முடிந்து தற்போது, பள்ளிகள் செயல்பட ஆரம்பித்து விட்டன. ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்பட்ட பாடங்கள் பிரவீனுக்குப் புரியாமல் இருந்துள்ளது. வகுப்புகள் தொடங்கப்பட்டதும், பாடங்கள் புரியாமல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாமல் போய் விடுமோ, என்ற அச்சமடைந்துள்ளார்.

இதனால், வீட்டில் தனியாக இருக்கும் போது, தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். போலீஸ் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…