ஜடேஜாவை கட்டிப்பிடித்து கண் கலங்கிய தோனி!ஆனந்த கண்ணீரில் சிஎஸ்கே!

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி

நேற்று குஜராத் அணிக்கு எதிராக வென்ற பின் சிஎஸ்கே கேப்டன் தோனி நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் கவனம் பெற்றது.தோனி பெரிதாக தனது உணர்வுகளை மைதானத்தில் வெளிக்காட்ட மாட்டார். அதாவது அவர் கோபம் அடைவார். ஆனால் அதை வெளியே பொதுவில் மைதானத்தில் காட்டிக்கொள்ள மாட்டார். டென்சன் ஆகாமல்.. முக்கியமான நேரங்களில் கூட அவர் அமைதியாக இருப்பார். அதனால்தான் அவரை கூல் கேப்டன் என்று அழைப்பார்கள்.ஆனால் அப்படிப்பட்ட தோனி கூட இந்த சீசன் முழுக்கவே அதிகம் எமோஷனலாக காணப்பட்டார். கேப்டன் கூலாக இருக்கும் சிஎஸ்கே கேப்டன் தோனி இந்த சீசனில் பல போட்டிகளில் களத்திலேயே கோபம் அடையும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன.கடந்த சில போட்டிகளுக்கு முன் மொயின் அலி பீல்டிங் செய்யும் போது அவர் மீது கோபம் அடைந்தார். அலி என்று மைதானத்திலேயே அவர் மீது கோபமாக கத்தினார். அதன்பின் கடந்த போட்டியில் மதீஷ் பத்திரனா மீது கோபம் அடைந்தார். கண்கள் முழுக்க கோபத்தோடு நெற்றி சுருங்க பத்திரனா மிக கோபமாக காணப்பட்டார். இந்த கோபத்திற்கு பின் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொடரின் தொடக்கத்திலேயே தோனி இப்படி எமோஷனல் ஆனது குறித்து சிஎஸ்கேவில் நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளிடம் விசாரித்ததில், தோனி பொதுவாக களத்தில் கோபம் அடைவார். ஆனால் என்ன அதை வெளியே காட்டமாட்டார். இக்கட்டான நேரத்தில் அவர் கூலாகவே இருப்பார். ஆனால் பீல்டர்கள், பவுலர்கள் தவறு செய்தால் அவர் கண்டிப்பாக கோபம் அடைவார். அப்படி அவர் அடைந்த கோபம்தான் தற்போது ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த சீசனில் அவர் வெளிப்படையாக பல இடங்களில் எமோஷனலாக காணப்பட்டார்.இந்த நிலையில் நேற்று போட்டியில் சிஎஸ்கே வென்றதும் தோனி அதிகம் எமோஷன் ஆனார். கண்களில் கண்ணீர் பொங்க ஜடேஜாவை தூக்கி கொண்டாடினார். பொதுவாக தோனி இப்படி எல்லாம் செய்யவே மாட்டார்.ஆனால் நேற்று அவர் ஜடேஜாவை தூக்கி குழந்தை போல கண்ணீர்விட்டபடி கொண்டாடினார். தோனி வித்தியாசமாக கொண்டாடியதை அருகில் இருந்த சக சிஎஸ்கே ரசிகர்களே கூட வியப்பாக பார்த்தனர்.தோனி இப்படி எமோஷன் ஆக காரணம் இருக்கிறது. அவருக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம். பெரும்பாலும் அடுத்த சீசனில் அவர் அணியில் இருக்க மாட்டார். இப்படிப்பட்ட நேரத்தில் கோப்பையோடு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீர்க்கமாக இருந்தார்.

அதோடு 5 கோப்பை என்ற மும்பை ரெக்கார்டை சமன் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். இதன் காரணமாகவே நேற்று சிஎஸ்கே வென்றதும்.. அந்த வெற்றிக்கு காரணம் தனது தளபதி ஜடேஜா என்றதும் தோனி எமோஷன் ஆகி இருப்பார் என்று கூறப்படுகிறது.குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக வென்று 2023 ஐபிஎல் சாம்பியன் ஆகி உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் திருவிழா போல நடந்து முடிந்துள்ளது. பல திருப்பங்களுடன், எதிர்பாராத வெற்றி தோல்விகளுடன் இந்த சீசன் நடந்து முடிந்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும். நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார். சிஎஸ்கேவில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா – துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *