“நம் தாய்நாட்டுக்காக அர்ப்பணிப்பு காட்டுவதில் நீங்களே சிறந்த உதாரணம்” – பிரதமர் மோடியை சந்தித்த ஜடேஜா
-ஊடகவியலாளர் இராகவேந்திரன்
“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். நம் தாய்நாட்டுக்காக கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு செலுத்துவதில் நீங்களே சிறந்த உதாரணம்” என பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா. தனது மனைவி ரிவாபா உடன் பிரதமர் மோடியை ஜடேஜா சந்தித்துள்ளார்.
“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். நம் தாய்நாட்டுக்காக கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அளிப்பதில் நீங்களே சிறந்த முன் உதாரணம். உங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் அனைவருக்கும் ஊக்கம் கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என ஜடேஜா தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் மோடியுடன் தானும், தனது மனைவியும் இருக்கும் படத்தையும் அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனைவி ரிவாபாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரவீந்திர ஜடேஜோ அப்போது நன்றி தெரிவித்திருந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் ஜடேஜா. இருந்தாலும் பேட்டிங்கில் அவர் சோபிக்க தவறியுள்ளார். மொத்தம் 9 இன்னிங்ஸில் பேட் செய்துள்ள அவர், 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.