டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்!

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வருடாந்திர தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.

வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு பிறகான போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் 2019-2020ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 எனவும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 எனவும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2021-2022ல் இங்கிலாந்துடன் வென்ற (4-0) தொடருக்கும் பாதி புள்ளிகளே கிடைத்தன. இதனால் ஆஸ்திரேலிய அணியின் புள்ளிகள் 121-ல் இருந்து 116 ஆக குறைந்துள்ளது.

அதேவேளையில் இந்தியா 2019-ல் நியூஸிலாந்து அணியிடம் 2-0 என தோல்வி அடைந்தது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் 2 புள்ளிகள் அதிகமாகி இந்திய அணி121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் தொடர்கிறது. மற்ற அணிகளின் இடங்களில் எந்தவித மாற்றமும் இல்லை. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளன. வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…