ஊசிக்கு ஊசி எதிர் முனை சண்டை!!! சி.எஸ்.கே vs ஆர்.சி.பி!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வருகிறது. அதன்படி இன்று (மே – 4) புதன்கிழமை நடக்கும் ஆட்டத்தில் பழைய எதிரிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி கொஞ்சம் கொஞ்சமாக பழைய பார்மிற்கு (?) திரும்பி தொடர் தோல்விகளில் தத்தளித்து வருகிறது. ப்ளே – ஆப் தகுதியை தக்க வைக்க நிறைய போராட வேண்டிய நிலையில் இருக்க, தோனியின் கேப்டன்சியால் மீண்டும் புத்துயிர் பெற்று போராட தயாராகி இருக்கும் சென்னை அணியுடன் மோதுகிறது.

ஐ.பி.எல் ன் 49 வது ஆட்டமாக இருக்கும் இந்த போட்டியில் சி. எஸ்.கே. வெற்றி பெற்றால் தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பை, அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் தக்க வைக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெங்களூர் அணி வெற்றி பெற்றால் தங்களின் ப்ளே – ஆப் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

எப்பொழுதும் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிகள் பரபரப்பாகவே கருதப்படும். இதை தாண்டி இந்த சூழ்நிலையில் இரண்டு அணிகளும் தங்களை நிரூபித்து தங்கள் இடங்களுக்காக போராடும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக இருக்கும். இந்த போட்டி இன்று மாலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *