அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய அண்டர்-19 கேப்டன்..!

இந்தியா அண்டர்-19 அணியின் கேப்டன் யாஷ் துல் தனது அறிமுக முதல்தர போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பையில் தமிழகத்திற்கு எதிராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். எலைட் குரூப் ஹெச் பிரிவில் தமிழகத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதமடித்து அவர் அசத்தியுள்ளார்.

கவுகாத்தியில் பார்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தமிழகத்திற்கு எதிரான இந்தப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அண்டர்-19 அணியின் கேப்டன் யாஷ் துல் சிறப்பாக விளையாடினார். அவர் 133 பந்துகளில் தனது முதல் சதத்தை விளாசினார். அதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.

யாஷ் துல் 97 ரன்களில் பேட் செய்து கொண்டிருக்கும் போது தமிழக வீரர் முகமது வீசிய பந்தில் அவுட்டானார். ஆனால், அந்த பந்து துரதிர்ஷ்டவசமாக நோ-பால் ஆக மாறியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய யாஷ் துல் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதனையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அண்மையில் அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அண்டர்-19 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…