ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை… இந்திய வேகப்பந்து வீச்சாளர் பேட்டி..!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமே இல்லை என தெரிவித்துள்ளார் . அவர் அணியில் உள்ள வீரர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

அண்மையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தொடங்க உள்ளது. இரு அணிகளும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. டி20 போட்டி தொடங்க உள்ள இந்த சமயத்தில் முகமது ஷமி ரோகித்சர்மா குறித்து புகழாரம் சூட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா குறித்து ஷமி கூறியதாவது, ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் பல ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவர் ஒரு சிறந்த தலைவர். அவர் எப்போதும் அணியில் உள்ள வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என கூறினார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ. 6.5 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…