டி20 போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதியுங்கள்… பெங்கால் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள்..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டியில் நேரில் காண ரசிகர்களுக்கு ஏற்கனவே பிசிசிஐ தடை விதித்திருந்தது. முதல் டி20 போட்டியிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், பெங்கால் கிரிக்கெட் வாரியம் மீதமுள்ள 2 டி20 போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ இடம் முறையிட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியை காண sponsor’s மற்றும் போட்டியில் விளையாடும் வீரர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது பிசிசிஐ. இந்நிலையில், பெங்கால் கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை நேரடியாக மைதானத்திற்கு வந்து போட்டிகளை காண அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்னதாக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…