மெகா ஏலத்தில் மயங்கிய தொகுப்பாளர்..!

ஐபிஎல் 15-வது சீசனின் மெகா ஏலம் பெங்களூருவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென நிகழ்ச்சி தொகுப்பாளர் மயங்கி விழுந்தார்.

பெங்களூரு நகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தை ஏலதாரர் ஹக் எட்மேட்ஸ் சிறப்பாக தொகுத்து நடத்தி வந்தார். அவர் அந்த பணியை கவனித்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2018 முதல் அவர் ஐபிஎல் ஏலத்தை முன்னின்று ஏலதாரராக நடத்தி வருகிறார்.

மிகவும் துடிப்புடன் அவர் தனது பணியை கவனித்து வந்தார். 36 ஆண்டுகளாக அவர் ஏலம் விடும் பணியை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…