மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கு..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை. இந்திய அணி 43 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேஷ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கியவர்களில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சஹரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 265 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கிந்திய தீவுகள் அணி 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…