இந்திய அணி அசத்தல் வெற்றி..!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 265 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 56 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 169 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஒடியன் ஸ்மித் 36 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருதும், பிரசித் கிருஷ்ணாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலா 3 விக்கெட்டுகளையும்

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…