இவரும் கில்கிறிஸ்டும் ஒன்னா..? என்ன சொல்கிறார் ரிக்கி பாண்டிங்..!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-ஐ ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட் அவருடன் ஓப்பிட்டு பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கில்கிறிஸ்ட் போல விளையாடுவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் 50-60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பின்னர் கில்கிறிஸ்ட் உடன் ஒப்பிட்டு பேசினால் அது பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் கில்கிறிஸ்ட் போல விளையாடுவதாகவும், அவர் இக்கட்டான அல்லது முக்கியமான சூழலில் தேர்ந்தெடுக்கும் ஷார்ட் செலக்சன் ஒரே மாதிரியாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். இதனை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தற்போது கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளராக இருக்கும்போது ரிஷப் பண்ட் விளையாடுவதை பார்த்து இருக்கிறேன். அதேபோல அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடுவதையும் பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் சதம் அடிக்கும் நேரத்திலும் கூட பெரிய ஷாட்களை தைரியமாக விளையாடுவார். அந்த நான் ரிஷப் பண்ட் இடமும் காண்கிறேன் என்றார். ஆனால் 50-60 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு இருவரையும் ஒப்பிட்டால் நன்றாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அவர் ஐசிசி கிரிக்கெட் ரிவ்யூ பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…