ரோகித் சர்மா இவ்வளவு பெரிய கோவக்காரரா…வைரலாகும் வீடியோ..!

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியின் பந்துவீச்சின் போது ஆட்டத்தில் 45-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச வந்தார். அப்போது, கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார். பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோசஃப், தூக்கி அடிப்பார் என்று எண்ணியதால், பவுண்டரி அருகில் வேகமாக ஃபீல்டர்களை மாற்றி வந்தார். அப்போது சாஹல் மட்டும் பொறுமையாக வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘உனக்கு என்ன ஆச்சு? ஏன் உன்னால வேகமா நடக்க முடியாதா? சீக்கிரம் போய் அங்கே நில்” என இந்தியில் கோபத்துடன் திட்டினார். சாஹலை கேப்டன் ரோகித் சர்மா திட்டிய வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதேபோல்தான் முதல் போட்டியில் பவுண்டரி லைனுக்கு சென்ற பந்தை பிரசித் கிருஷ்ணா சரியாக தடுக்காததால், பொறுமை இழந்த ரோகித் சர்மா அவரை கடுமையாக திட்டினார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த செயல் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…