தோனியை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி… நினைவுகளை பகிரும் முன்னாள் ஏலதாரர்..!

ஐபிஎல் போட்டி தொடங்கிய போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ஏலத்தில் எடுப்பதற்கு அனைத்து அணிகளும் தங்களுக்குள் கடுமையாக மோதிக் கொண்டன என ஐபிஎல் ஏல நினைவுகளை பகிர்ந்துள்ளார் முன்னாள் ஐபிஎல் ஏலதாரர் ரிச்சர்ட் மேட்லி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை ஏலத்தில் எடுக்க பலமுனை போட்டி நிலவியதாக முன்னாள் ஐபிஎல் ஏலதாரர் ரிச்சர்ட் மேட்லி தெரிவித்துள்ளார். முதல் சீசனின்போது தோனிக்கு அதிக டிமாண்ட் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிச்சர்ட் மேட்லி கூறியிருப்பதாவது, தோனியை ஏலத்தில் எடுக்க அணிகள் போட்டோ போட்டி போட்டன. அதில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது. சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவர் தேவைப்பட்டார். அதனால் தோனியை பிக் செய்யும் நோக்கத்தில் அந்த அணி நிர்வாகம் இருந்தது. இறுதியில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தோனியை சென்னை அணி வாங்கியது என்றார்.

ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…