மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா..!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும், கே.எல்.ராகுல் 49 ரன்களும் குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஒடியன் ஸ்மித் மற்றும் ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறிது நிதானமாக விளையாடினாலும் சாய் ஹோப் 27 ரன்களிலும், கிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு வீரர்களில் ப்ரூக்ஸ் மற்றும் ஹூசைனைத் தவிர யாரும் பெரிதாக ரன் குவிக்க வில்லை. ப்ரூக்ஸ் 44 ரன்களிலும், ஹூசைன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஒடியன் ஸ்மித் கடைசி நேரத்தில் சிறிது அதிரடி காட்டினாலும் அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா வெறும் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிறப்பாக பந்துவீசி அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…