பிரசித் கிருஷ்ணாவை புகழ்ந்து தள்ளும் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர்..!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்களை ஒருவரான கிருஷ்ணா வளர்ந்து வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…