இறந்த பிறகு வைரலாகும் லதா மங்கேஷ்கரின் தோனி குறித்த ட்விட்..!

இந்தியாவின் பின்னணி பாடகிகளில் பிரபலமான லதா மங்கேஷ்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவினால் காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாருக்கான் போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து பதிவு செய்த டுவிட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை 50 ஓவர் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடும் வரை இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக மகேந்திர சிங் தோனி ரன் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய செய்தார்.

இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறிய பின் மகேந்திர சிங் தோனி ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலக உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான லதா மங்கேஷ்கர் தோனிக்கு ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

வணக்கம், தோனி. நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக நான் கேள்விப்பட்டேன். தயை கூர்ந்து அப்படி ஒரு முடிவை நீங்கள் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவுக்கு உங்கள் ஆட்டம் தேவை. இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட” என தெரிவித்துள்ளார் மறைந்த லதா மங்கேஷ்கர். 

தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…