சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும், இந்த போட்டியில் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய விராட் கோலி இந்த சாதனையை படைத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

உலக அளவில் உள்ள மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் விராட்கோலி 4-வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் அவரவர் சொந்த நாடுகளில் இந்த சாதனையை ஏற்கனவே படைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை கடந்த 2007-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் நிகழ்த்தியிருந்தார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இந்திய அணி விளையாடிய 1000 ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…