இந்திய வீரர்கள் இருவருக்கு அடித்த ஜாக்பாட்..!

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் தமிழக வீரர் ஷாருக்கான் மற்றும் இஷன் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாளை இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடங்க இருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை எடுத்து அவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் யார் களம் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் மயங்க் அகர்வாலை அணிக்கு தேர்வு செய்தனர்.

இந்நிலையில், இளம் வீரர்கள் இரண்டு பேருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழக வீரர் ஷாருக்கான் இடம் பெற்றுள்ளார். மற்றொரு வீரராக இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் இஷன் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளை விளையாட உள்ள ஒரு நாள் போட்டி இந்திய அணி விளையாடும் 1000 ஆவது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…