இந்தியா அண்டர்-19 அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரோகித் சர்மா..!

இந்தியா அண்டர்-19 கிரிக்கெட் அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ள நிலையில் இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இளம் இந்திய அணி இங்கிலாந்து அணியை தனது இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது. இந்தப் போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

தனது வாழ்த்து செய்தியில் ரோகித் சர்மா கூறியிருப்பதாவது, முதலில் நான் இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். அவர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதிலிருந்து அவர்களுடைய கடின உழைப்பு தெரிகிறது. நான் பெங்களூரில் இருக்கும் போது இந்தியா அண்டர்-19 அணியினர் பயிற்சி எடுப்பதை பார்த்து இருக்கிறேன். அவர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொள் வார்கள் என்றார். முன்னதாக ஆசிய கோப்பை போட்டிக்காக துபாய் சென்ற அவர்கள் பின்னர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் இளம் இந்திய அணியுடன் பேசியபோது அவர்களிடம் இதைத்தான் கூறினேன். அவர்கள் ஐசிசி போட்டிகளில் விளையாடும்போது ஒவ்வொரு முறையும் சவாலான எதிரணியை சந்திக்க நேரிடும் என்றேன். ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து உங்களுடைய பாணியில் விளையாட வேண்டும். இந்த உலக கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதனைப் பயன்படுத்திக்கொண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…